கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத் தில் இதுவரை 67 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தபோது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த சமய்சிங் மீனா, டி.எஸ்.பி.க்கள் இருவர், கள்ளக்குறிச்சி காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தன், கலால் இன்ஸ்பெக்டர்கள் என 9 பேரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டா லின். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற குளறுபடிகள் தொடர்பாக துறைரீதியிலான விசாரணை நடந்துவந்தது. இந்நிலையில், வடக்கு மண்டல ஐ.ஜி.யாக பதவியேற்றுக் கொண்ட அஸ்ரா கார்க் எடுத்த அதிரடி நடவடிக்கைகள், தவறு செய்த, தவறுக்கு துணைபோன காவல்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kallakuruchi-police2.jpg)
கள்ளக்குறிச்சி சாராயச்சாவுகள் தொடர் பாக எஸ்.பி. உட்பட 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டபோது, இதற்கு இவர்கள் மட்டுமே காரணமில்லை, சாராயம் குடித்து இருவர் இறந்தபோதே, இது சாராய மரணமில்லையென்று தவறான தகவலை அப்போதைய எஸ்.பி. சமய்சிங் மீனாவிடம் எஸ்.பி. தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகம் தெரிவித்தார். அதையே அவர் மேலதிகாரிகளுக் கும், கலெக்டருக்கும் தெரிவித்தார். தொடர்ச்சி யாக மரணங்கள் நடந்தபின்பே காவல்துறை சாராய மரணமென்பதை ஒப்புக்கொண்டது. இதனை மறைத்ததே, எஸ்.பி., கலெக்டர் மீதான நடவடிக்கைகளுக்கு காரணம். அதேபோல், கள்ளச்சாராயத்தை காவல்நிலையம், நீதிமன்றத் தின் அருகிலேயே விற்பனை செய்வது தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை எஸ்.பி.யின் கவனத்துக்கு தனிப்பிரிவு போலீஸார் கொண்டு செல்லவில்லை. கள்ளக் குறிச்சி மாவட்டம் முழுவதுமே தனிப்பிரிவு போலீஸார் மெத்தனமாக இருந்தனர். அதோடு, கள்ளச்சாராயம் குடித்து முதல் இறப்பு நடந்தது காலை 6 மணிக்கு. மருத்துவனைக்கு காலை 9 மணிக்கே தனிப்பிரிவு போலீஸார் சென்று விசாரணை நடத்தினர், அதன்பின்பும் அதனை மறைக்க முயற்சித்துள்ளனர். இறப்பு வீட்டுக்கு வந்தவர்கள் அதே கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்ததாலேயே இறப்பு எண்ணிக்கை இவ்வளவு அதிகமானது. காவல்துறை எஸ்.பி. தனிப்பிரிவினர் நினைத்திருந்தால் மேலதிகாரி களை அலர்ட் செய்து இதனை தடுத்திருக்க முடியும் எனத் தொடர்ச்சியாகக் காவல் துறையின் மெத்தனம் குறித்து நக்கீரன் இதழில் விரிவாக செய்தி வெளியிட்டு வந்தோம்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி. தனிப்பிரிவு லஞ்சம் வசூலிப்பதிலும், அதை மேலதிகாரிகளுக்கு பங்கு பிரித்துத் தருவதிலும் செலுத்திய கவனத்தை குற்றச்செயல்களை தடுப்பதில் காட்டவில்லை. முதல் சாராய இறப்பு நடந்த தற்கு கள்ளக்குறிச்சி நகர காவல்நிலையத்தில் முதல் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. அந்த எப்.ஐ.ஆரில் கள்ளச்சாராயத்தை சுடுகாட்டில் விற்பனை செய்தார்கள் எனப் புகார் தந்தவரிடம் எழுதி வாங்கி எப்.ஐ.ஆர். போட்டது போலீஸ். அந்த எப்.ஐ.ஆர். போடும்போது சுமார் 15 பேர் இறந்திருந்தனர். அந்த நிலையிலும் சாராய வியாபாரி சின்னக்குட்டி டீமை காப்பாற்ற வேண்டும் என்றே போலீஸ் அதிகாரிகள் சிலர் நினைத்தனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்துக்கு பின்பு அலர்ட்டாக இருந்திருக்க வேண்டிய தனிப்பிரிவு, உளவுப்பிரிவு போலீ ஸார் அலட்சியமாக இருந்ததன் விளைவே இப்படியொரு வரலாற்றுத் துயரம் நடந்துள் ளது என்றும் செய்திகள் வெளியிட்டு வந்தோம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kallakuruchi-police.jpg)
நமது செய்தி ஏற்படுத்திய தாக்கத்தால் வடக்கு மண்டல ஐ.ஜி.யாக ஒரு வாரத்துக்கு முன்பு பதவியேற்ற அஸ்ரா கார்க், விழுப்புரம் மண்டல டி.ஐ.ஜி. திஷா மிட்டல், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுர்வேதியிடம் விவா தித்து, எஸ்.பி. தனிப்பிரிவில் பணியாற்றுபவர் களைக் கூண்டோடு காத்திருப்போர் பட்டிய லுக்கு மாற்ற உத்தரவிட்டார். அதன்படி, கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை கண்காணிக்கத் தவறியதாகவும், அலட்சியமாக செயல்பட்டதாகவும்கூறி, கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகம், கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன், திருக்கோவிலூர் உட்கோட்ட தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், சின்னசேலம் தனிப் பிரிவு காவலர் சரவணன், கச்சிராபாளையம் தனிப்பிரிவு காவலர் கணேஷ், சங்கராபுரம் தனிப்பிரிவு காவ லர் சிவஜோதி மற்றும் கள்ளக்குறிச்சி தனிப் பிரிவு காவலர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட ஏழு பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். அதேபோல், இதே விவகாரத் தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றும் ஒரு உதவி ஆய்வாளர் , 3 சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 14 காவலர்கள் உட்பட மொத்தம் 17 பேர் வேலூர் சரகத்திற்கு பணியிட மாற்றம் செய்து அதிரடி காட்டியுள்ளனர். இவர்கள் மீது துறைரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kallakuruchi-police1.jpg)
இந்நிலையில், நம்மிடம் பேசிய அதிகாரி ஒருவர், "ஆளும்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இரு வரும், கலெக்டர் அருகில், எஸ்.பி. அருகில் தங்களுக்கு வேண்டப்பட்ட, தங்கள் சாதியைச் சேர்ந்த அலுவலர்களை மறைமுகமாக நியமிக் கச் செய்கின்றனர். அவர்கள் மூலமாக என்ன நடக்கிறது எனத் தெரிந்துகொள்வதோடு, கீழ்நிலை அலுவலர்கள் மூலமாக மேலதிகாரி களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கின்றனர். பணியில் தவறு செய்த அலுவலர்கள், ஊழியர்களை இடம் மாற்றினால், அந்த எம்.எல்.ஏ.வோட ஆள் என்று இடமாற்றத்தில் குளறுபடி செய் வார்கள். இதுகுறித்தும் முதலமைச்சர் கவனிக்க வேண்டும்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-07/kallakuruchi-police-t.jpg)